அலகில் அறிவும் அளவில்
திறனும் அதிகமுள்ள
புலவர்
கறுப்பண்ணன் புத்தொளி நூலுள் புகுத்துகிறார்
பலரும்
படித்துப் பகுத்தாய்ந்து பார்த்தால் பழந்தமிழில்
இலக்கண ஆய்வில் இதுவும் இயல்பென எண்ணுவரே
.
முறையாய்த்
தமிழை முனைப்புடன் கற்று முழங்கியவர்
மறையாம்
குறளினை மாந்தி உரைநூல் வழங்கியவர்
நறையென
நூலை நலமுறச் செய்திங்கே நல்கியவர்
பிறைபல
கண்ட பெரியார் அவரெனப் போற்றுவனே.
எழுத்தில்
பரவும் எழிலார் ஒளியினிச் சொல்லிடையே
வழுத்தும்
வகையில் வனப்புடன் பாய்க வளியெனவே
பழுத்த
அறிவின் பயன்கள் அனைத்தும் படிப்படியாய்
விழுதாய்
இறங்கி விளைக நலமென வாழ்த்துவனே.
எண்பதை
எட்டும் எழிலார் முதுமை எதிர்வரினும்
ஒண்டமிழ்க்
கான உயர்பணி என்றே உழைத்ததனால்
எண்ணிய
எண்ணம் எழுத்தினில் ஏற எழிலுறவே
வண்டமிழ்
நூலை வடித்தார் வளமுடன் வாழியவே!
No comments:
Post a Comment